×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத்தலைவர் ராஜினாமா: புலியூர் பேரூராட்சி தலைவரும் பதவியை துறந்தார்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் பதவியை திமுகவின் ஜெயபிரபா ராஜினாமா செய்தார். அதேபோல புலியூர் பேரூராட்சி தலைவர், கீரமங்கலம் துணை தலைவரும் ராஜினாமா செய்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் உள்ள வி.சி.கவுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், 29வது வார்டு திமுக கவுன்சிலர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 23 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். விசிக சார்பில் போட்டியிட்ட கிரிஜா திருமாறனுக்கு 3 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. தொடர்ந்து துணைத்தலைவர் பதவிக்கு விசிக கவுன்சிலர் கிரிஜா திருமாறனும், திமுக சார்பில் 3வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரபா மணிவண்ணனும் போட்டியிட்டனர். இதில் 22 வாக்குகள் பெற்று ஜெயபிரபா வெற்றி பெற்றார். கிரிஜா திருமாறனுக்கு 6 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் அவர் தோல்வி அடைந்தார். திமுக தலைமையால் கூட்டணி கட்சிக்கு அறிவிக்கப்பட்ட தலைவர் பதவியை திமுக கவுன்சிலர் கைப்பற்றியது சர்ச்சை ஏற்படுத்தியது. துணைத்தலைவர் பதவியும் திமுகவுக்கே கிடைத்தது. இந்நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்யும்படி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து துணைத்தலைவர் பதவியில் இருந்து ஜெயப்பிரபா மணிவண்ணன் ராஜினாமா செய்து, வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவனை சந்தித்து பொன்னாடை அணிவித்து தகவலை தெரிவித்தார். அதை ஏற்றுக்கொண்ட திருமாவளவன், தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெயந்தி ராதாகிருஷ்ணனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு விசிக கவுன்சிலர் கிரிஜாவுக்கு துணைத்தலைவர் பதவி வழங்கப்பட உள்ளது. பேரூராட்சிகளில்: கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டது. 1வது வார்டில் வெற்றி பெற்ற அக்கட்சி கவுன்சிலர் கலாராணி போட்டியிட இருந்தார். ஆனால், 3வது வார்டு திமுக கவுன்சிலர் புவனேஸ்வரி போட்டியிட்டு பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, அவர் நேற்று ராஜினாமா செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சி துணை தலைவர் பதவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. 11வது வார்டில் வெற்றி பெற்ற முத்தமிழ்செல்வி மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு எதிராக 8வது வார்டு திமுக கவுன்சிலர் தமிழ்செல்வன் போட்டியிட்டு 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மு.க.ஸ்டாலின் உத்தரவை ஏற்று துணைத்தலைவர் பதவியை தமிழ்செல்வன் நேற்று ராஜினாமா செய்தார்.காங்கயம் நகராட்சி: திருப்பூர் மாவட்டம் காங்கயம் நகராட்சி துணை தலைவராக போட்டியிட திமுக சார்பில் 16வது வார்டு கவுன்சிலர் கமலவேணி அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரை எதிர்த்து திமுகவை சேர்ந்த 4வது வார்டு உறுப்பினர் இப்ராகிம் கலிலுல்லா, 18வது வார்டு கவுன்சிலர் வளர்மதியும் போட்டியிட்டனர். இதில் இப்ராகிம் கலிலுல்லா துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அறிவிக்கப்படாதவர்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து காங்கயம் நகராட்சி துணைத்தலைவர் பதவியை இப்ராகிம் கலிலுல்லா நேற்று ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை, நகராட்சி ஆணையர் வெங்கடேஸ்வரனிடம் கொடுத்தார்….

The post திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நெல்லிக்குப்பம் நகராட்சி துணைத்தலைவர் ராஜினாமா: புலியூர் பேரூராட்சி தலைவரும் பதவியை துறந்தார் appeared first on Dinakaran.

Tags : President ,Djagar ,BM G.K. ,stalin ,goellikupam ,pulliore council ,Chennai ,Djagam ,G.K. ,jayabrapha ,dimugu ,nellikupam ,Kjagal Leader ,B.M. G.K. ,vice president ,gooseberry ,Pulliur Emperor ,
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...